தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு சில தமிழ்க் கட்சிகள் கலந்துகொள்ளாது எனத் தெரிகின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாது என அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இதற்கான அழைப்பு தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான நிலையில் தாம் எவ்வாறு கலந்துகொள்வது? எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளையில், சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகஸ்த்தர் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது இன்று காலை வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரை வாளால் வெட்டிய கும்பல் ஒன்று அவரது கைக்கடிகாரம், பணப் பை, மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கைப்பற்றிச் சென்றிருக்கின்றது. இன்றுகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில்கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவரே காயமடைந்தவராவார். சுன்னாக காவல் துறை இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »கொரோனாவினால் ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள்
ஆஸ்திரேலியாவுக்குள் வாரம் 4,000 வெளிநாட்டு வருகைகளை மட்டுமே அனுமதிப்பது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையின்றி, விசாயின்றி, முறையான மருத்துவ வசதியின்றி நாட்டுக்கும் திரும்ப முடியாமல் ஆயிரகக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் ஒன்பதாவது வலிமையான கடவுச்சீட்டை அவர்கள், தங்கள் (ஆஸ்திரேலிய) அரசு கொரோனா பெருந்தொற்று சூழலில் கைவிட்டு விட்டதாக கவலைத் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்நோக்கியிருந்த நிலையில், வாரம் 4 ஆயிரத்திற்கு குறைவான வருகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும என்ற கட்டுப்பாட்டை கடந்த ...
Read More »பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும்
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார். கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களாக முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ...
Read More »மரணப்படுக்கையில் தந்தை… நான்கு பிள்ளைகளில் ஒருவருக்கு மட்டும் காண வாய்ப்பு
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலை தடுக்க இரண்டு மாகாணங்கள் எடுத்துள்ள கடும்போக்கு நடவடிக்கைகளால் ஒரு குடும்பம் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால், இரு மாகாணங்களுக்கு இடையேயான கடுமையான சட்டங்களால் தற்போது ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான மார்க் கீன்ஸ் என்ற லொறி சாரதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிலை 4 மூளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று ...
Read More »உலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்
உலகத் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும், அதன் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு அந்தந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துத் தீர்வு காணவும் ஏதுவாக 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்களை அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களுக்கும் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டு, ஒன்றாக ஒருங்கிணைக்கும் பணியை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ...
Read More »கடல் வழியாக இலங்கை வந்த இருவர் மன்னாரில் வைத்துக் கைது
சட்டவிரோதமான முறையில் நேற்று அதிகாலை, இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கமாக வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், மன்னார் – பள்ளிமுனைப் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்படஉள்ளனர். இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் ஒரு வாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு, அதன்முடிவுகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Read More »உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவலைத் தரமுன் தொடர்பை துண்டித்த நிலந்த
கடந்த 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்தனவிடமிருந்து தான் தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றதாகவும் அது சர்வதேச தீவிரவாதிகளின் ஒருங்கிணைந்த உடனடி பயங்கரவாத தாக்குதல் குறித்த நம்பகமான தகவல் பற்றியதாகும். ஆனால் மேலதிக தகவல்களை அவர் வழங்காது உரையாடலின் நடுவே தொலைபேசித் தொடர்பை துண்டித்ததாகவும் தேசிய புலனாய்வகத்தின் முன்னாள் தலைவர் (சின்ஐ) சிசிர மெண்டிஸ் கடந்த செப்டெம்பர் 15இல் இடம்பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். கடந்த 2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ...
Read More »இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது பந்து தலையில் ...
Read More »புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலி!
லிபியா (Libya) அருகே மத்திய தரைக்கடல் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலிகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இவ் விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், மாயமான சிலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் லிபிய கடல் படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »