யாழ்ப்பாணத்தில் பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது இன்று காலை வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அவரை வாளால் வெட்டிய கும்பல் ஒன்று அவரது கைக்கடிகாரம், பணப் பை, மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கைப்பற்றிச் சென்றிருக்கின்றது.
இன்றுகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில்கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் (43) என்பவரே காயமடைந்தவராவார். சுன்னாக காவல் துறை இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal