சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரமும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கார்மென் ரெய்ன்ஹார்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சில மாதங்களாக முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், தற்போது உலகப் பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது.
குறைந்தது 5 வருடங்களாவது ஆகும். வளர்ந்த நாடுகளை விட மற்ற நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கூடுதல் ஆண்டுகள் இருக்கும்.
ஏழை நாடுகள் கொரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக வறுமை விகிதம் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என கூறி உள்ளார்.