தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடைசெய்து, தமிழ் மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையை அரசாங்கம் தடுத்துள்ளமைக்கு எதிராகப் போராடுவதற்காக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கு சில தமிழ்க் கட்சிகள் கலந்துகொள்ளாது எனத் தெரிகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாது என அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். இதற்கான அழைப்பு தமக்குக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான நிலையில் தாம் எவ்வாறு கலந்துகொள்வது? எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளையில், சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இதில் கலந்துகொள்ளவுள்ளன.
இன்று மாலை 3.30 மணிக்கு நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Eelamurasu Australia Online News Portal