தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மஹிந்தவுக்கு எதிராக ஒத்திவைப்பு பிரேரணை!
தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனாவிடமிருந்து நிதியை பெற்ற விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கியதேசிய கட்சி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை இவ்வாறான பிரேணையை கொண்டுவருவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குறித்த பிரேரணையை கொண்டுவருவது குறித்தும் ஐக்கியதேசிய கட்சி ஆராய்ந்து வருகின்றது. இது குறித்து ஐதேகவின் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More »தாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்!
தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணி……இதுவரை 6 பேரை மீட்டுள்ளனர். அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம். ஏன் அந்த பதினொரு சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்? இந்த தருணம் வரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை. பிபிசி தாய்லாந்து செய்தியாளர்கள் தரும் ...
Read More »நவுறு தடுப்பு முகாமிலிருந்து தமிழ்க் குடும்பம் உட்பட சில அகதிகள் அமெரிக்கா சென்றனர்!
அவுஸ்திரேலியாவின் நவுறு தடுப்பு முகாமிலுள்ள மேலும் சில அகதிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். ஒரு தமிழ் குடும்பம் உட்பட ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் ரொஹின்யா பின்னணி கொண்ட சுமார் 22 பேருகு அமெரிக்கா செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றதாக Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் அகதிகள், அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்படுவார்கள். அங்கு செல்லும் அகதிகளுக்கு முதல் 3 மாதங்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். மேலும் ஒரு ...
Read More »தாய்லாந்து குகைக்குள் இருந்து 6 மாணவர்கள் மீட்பு!
தாய்லாந்து நாட்டில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 6 மாணவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. திடீரென பெய்த ...
Read More »பசிலின் மனைவியின் அமைப்பிற்கு பணம் வழங்கிய துறைமுகநிறுவனம்!
முன்னாள் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியின் அமைப்பொன்றிற்கு சீனாவை சேர்ந்த துறைமுகநிறுவனமொன்று பணம் வழங்கியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இது குறித்த காசோலையொன்றை வெளியிட்டுள்ளதை தொடர்ந்தே இது குறித்த சர்ச்சை மீண்டும் மூண்டுள்ளது. கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் என்ற நிறுவனம் 2012 இல் புஸ்பா ராஜபக்ச மன்றத்திற்கு 19.41 மில்லியன் பெறுமதியான காசோலையை வழங்கியுள்ளது. மே 21 2012 திகதியிடப்பட்ட குறிப்பிட்ட காசோலை கொமேர்சல் வங்கியில் உள்ள புஸ்பா ராஜபக்ச மன்றத்தின் பெயரிற்கு அனுப்பபட்டுள்ளது. கொழும்பு இன்டநசனல் ...
Read More »தாய்லாந்தில் குகை – சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு!
கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியினை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார். இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ...
Read More »55 மில்லியன் டொலரைக் கொடுத்த அதிஷ்டலாபச் சீட்டு!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் Powerball அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் சுமார் 55 மில்லியன் டொலர்களை வென்ற நபர் 175 நாட்கள் கழித்து தனது பரிசினைப் பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஜனவரி 11 ஆம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில் Powerball க்கான 12 ஆகிய இலக்கங்களைக் கொண்ட அதிஷ்டலாபச் சீட்டு 55 மில்லியன் டொலர்களை வென்றது. இந்தப் பரிசுத்தொகையை வென்றவர் யார் என்பது நீண்ட நாட்களாக வெளியில் வராமல் இருந்தது. இச்சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட தொகையை 6 மாதங்களுக்குள் யாரும் உரிமை கோரவில்லை என்றால் விக்டோரியாவின் State Revenue-விடம் ஒப்படைக்க ...
Read More »வாட்ஸ்அப் – போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்!
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும். ...
Read More »வடகொரியா அணு ஆயுதங்களை அழித்த பிறகே தடைகள் விலக்கப்படும்!
வடகொரியா அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்த பிறகே அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இன்று தெரிவித்தார். வடகொரியா, ஜப்பான், வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர், வடகொரியா தலைநகர் பியோங்யாங்கிற்கு கடந்த 5-ம் தேதி சென்றிருந்தார். சமீபத்தில், அணு ஆயுதங்களை மிக வேகமாக அழிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்க ...
Read More »
Eelamurasu Australia Online News Portal