உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நியூசிலாந்தில் நிகழ்ந்த இரண்டு மசூதிகளில் மீதான தாக்குதலில் 50 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இன மேலாதிக்கவாதி நடத்திய அந்த தாக்குதலில் பலியான சிரிய அகதிகளான தந்தையும் மகனும் முதல்கட்டமாக நடந்த ஒரே இறுதி நிகழ்வில் அடக்க செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் அருகில் உள்ள இடுகாட்டில் கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது 15 வயது மகன் ஹம்சா இறுதி அஞ்சலியை செலுத்தினர். அப்போது அவர்களது பெயர் ஒலிப்பெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கை திருத்தங்கள் !
அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுதோறும் உள்வாங்கப்படவுள்ள நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை முப்பதினாயிரம் பேரினால் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் உட்பட முக்கிய குடிவரவு கொள்கை திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பிலான முக்கிய அறிவிப்பொன்றை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. . பிரதான நகரங்களில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி மற்றும் நகரக்கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய சேவை விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கிய குடிவரவுக்கொள்கைகளில் திருத்தங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அதனை அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு முன்வைத்திருந்தது. இந்த மாற்றங்களின் பிரகாரம், தொழில்துறை சார்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு வருகை ...
Read More »ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. ஜெனிவா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை ஜெனிவா நேரப்படி 9 மணியளவில் இலங்கை தொடர்பான விவகாரம் எடுக்கப்படவுள்ளது. முதலில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அது மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உரையாற்றவுள்ள ...
Read More »அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை கொடுக்கத் தவறியவர் அடித்துக்கொலை…!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் Airbnb சேவை மூலம் பெற்ற அறைக்கு வாடகை கொடுக்கத் தவறிய நபரை கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேசன் என்னும் நபர் தமக்குக் கிட்டத்தட்ட 200 வெள்ளி வாடகை கொடுக்கத் தவறிய ரமிஸ் என்பரை அடித்துக் கொலை செய்துள்ளார். ரமிஸ் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேசன் வீட்டில் தங்கியுள்ளார். ஜேசனுக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு நபர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் கொலை செய்தது சரியே என்று ஜேசன் காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Read More »அவுஸ்திரேலியரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்!
நபர் ஒருவரின் உயிரை நொடிப்பொழுதில் ஐபோன் காப்பாற்றிய த்ரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 43 வயதான நபர் காரில் இருந்து தனது வீட்டில் இறங்கியுள்ளார். அப்போது ஒரு நபர் தனது கையில் அம்புடன் நின்றிருப்பதை பார்த்து அதனை தனது ஐபோனில் காணொளி எடுத்துள்ளார். ஆனால், பாய்ந்து வந்த அம்பு, இவர் கையில் இருந்த ஐபோனை துளைத்து 2 இன்ச் வரை வெளிவந்திருந்தது. ஸ்கிரீன்கார்டு கழன்று வந்தது. அம்பு தாக்கியதில் போன் கையிலிருந்து பறந்து ...
Read More »அவுஸ்திரேலிய தீவிரவாதியின் தாய் தலைமறைவு!
நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் தாயும் சகோதரியும் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், முதன்முறையாக அவனது தாயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரெண்டன் என்னும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி, நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய செய்திகள் அவனது தாயாராகிய ஷாரனுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். உடனடியாக பள்ளியை விட்டு புறப்பட்ட அவர், தனது மகளுடன் மறைவிடம் ஒன்றிற்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது. பின்னர் அவரும் பிரெண்டனின் சகோதரியான லாரனும் வசித்த வீடுகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது உடனிருப்பதற்காக ...
Read More »இன்று முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…!
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, வாக்குமூலம் வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். மார்ச் மாதம் 11 ஆம் திகதி அவரிடம் சுமார் 8 மணி நேர விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இரண்டாவது நாளாகவும் அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று (19) மூன்றாவது தடவையாக வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு ...
Read More »சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். விளம்பர சுவரொட்டிகளை விளம்பரப் பலகைகளில் மட்டுமே ஒட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மேலதிகமாக விளம்பரப் பலகைகள் தேவைப்படுவோர் விண்ணப்பத்தால் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், தனியார் வர்த்தக ...
Read More »மசூதிகளில் மக்களை கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் – நியூசிலாந்து பிரதமர்
மசூதிகளில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ...
Read More »எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம்!
பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள் என்றும், நாங்கள் கேட்பது எமது அடிப்படை உரிமைகளையே என்றும் இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை வந்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் எடுத்துரைத்துள்ளார். சிறிலங்கா வந்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் ...
Read More »