அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் Airbnb சேவை மூலம் பெற்ற அறைக்கு வாடகை கொடுக்கத் தவறிய நபரை கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் என்னும் நபர் தமக்குக் கிட்டத்தட்ட 200 வெள்ளி வாடகை கொடுக்கத் தவறிய ரமிஸ் என்பரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
ரமிஸ் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேசன் வீட்டில் தங்கியுள்ளார். ஜேசனுக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு நபர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தான் கொலை செய்தது சரியே என்று ஜேசன் காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal