நபர் ஒருவரின் உயிரை நொடிப்பொழுதில் ஐபோன் காப்பாற்றிய த்ரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
43 வயதான நபர் காரில் இருந்து தனது வீட்டில் இறங்கியுள்ளார். அப்போது ஒரு நபர் தனது கையில் அம்புடன் நின்றிருப்பதை பார்த்து அதனை தனது ஐபோனில் காணொளி எடுத்துள்ளார்.
ஆனால், பாய்ந்து வந்த அம்பு, இவர் கையில் இருந்த ஐபோனை துளைத்து 2 இன்ச் வரை வெளிவந்திருந்தது.
ஸ்கிரீன்கார்டு கழன்று வந்தது. அம்பு தாக்கியதில் போன் கையிலிருந்து பறந்து இவர் தாடையில் அடித்துள்ளது.
பெரிய அளவில் காயம் ஏற்படாமல், உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இந்த குற்றத்திற்காக அம்பை எய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு ஏப்ரல் 15 ஆம் திகதி விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடந்த இந்த சம்பவம் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.