அவுஸ்திரேலிய தீவிரவாதியின் தாய் தலைமறைவு!

நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதியின் தாயும் சகோதரியும் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், முதன்முறையாக அவனது தாயின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரெண்டன் என்னும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாதி, நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய செய்திகள் அவனது தாயாராகிய ஷாரனுக்கு தெரிவிக்கப்பட்டபோது, அவர் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

உடனடியாக பள்ளியை விட்டு புறப்பட்ட அவர், தனது மகளுடன் மறைவிடம் ஒன்றிற்கு சென்றுவிட்டதாக தெரியவந்தது.

பின்னர் அவரும் பிரெண்டனின் சகோதரியான லாரனும் வசித்த வீடுகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது உடனிருப்பதற்காக மீண்டும் ஷாரன் தனது வீட்டிற்கு திரும்பினார்.

சுமார் மூன்று மணி நேர சோதனைக்குப்பின் ஷாரனை அவர் மறைந்திருந்த இடத்திற்கு பொலிசாரே கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அந்த நேரத்தில் தனது வீட்டை விட்டு வெளியே வரும்போது முதன்முறையாக பத்திரிகையாளர்களின் கண்ணில் சிக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.