சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகையும் அச்சம் கொள்ள வைத்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 259 பேர் உயிரிழந்துள்ளனர். 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சீனாவில் இருக்கும் பிற நாட்டு மக்களை மீட்பதற்காக அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற நிலையில், இந்தியாவிலிருந்து சீனா சென்ற சிறப்பு விமானம் 300-க்கும் அதிகமான இந்திய ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 1,730 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தம்!
பாதுகாப்பு விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் செல்பவர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதத்தில் 1,730 பேரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையும் உள்துறையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர் அல்லது சர்வதேச விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2018- 19 நிதியாண்டில், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 387 பேர் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டில், 205 பேர் மட்டுமே ...
Read More »எமக்கான தேசம், எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வே மேலெழுகின்றது!
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல,எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது. ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமிழர்களை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள பேரினவாத தலைமைகள் வெளிக்காட்டி விட்டது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இது தமிழர் தரப்பிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட ...
Read More »சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க புதிய மென்பொருள்!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் குறிப்பாக சீனப் பிரஜைகளால் வைரஸ் பரவாமல் தடுக்க புதிய மென்பொருள் மூலாக அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் பாராளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது இதனை சுகாதாரம், மனித நலன் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவிடம் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குள் ‘ICTA’ உடன் இணைந்து வைத்தியர்கள் குழு ஒன்று இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது என்றும், வருகை தரும் ...
Read More »அவுஸ்திரேலிய காட்டுத் தீ ! கான்பராவில் அவசர காலநிலை பிரகடனம்!
அவுஸ்திரேலியாவின், கான்பராவிற்கு தெற்கே பாரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமையினால் அதிகாரிகள் கான்பராவிற்கு அவசரகால நிலைமைய பிரகடனப்படுத்தியுள்ளனர். கான்பராவில் கடந்த 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயாக இதனை தெரிவித்துள்ளனர். இதனால் கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றம் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிட்னிக்கும் மெல்போர்னுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த சிறிய பிரதேசத்தில் சுமார் 400,000 குடியிருப்பாளர்கள் உள்ளனர். 2003 ஆம் ஆண்டில், கான்பராவின் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 500 ...
Read More »ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கோருபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி !
ஆஸ்திரேலியாவில் குடியுரிமைப் பெறுவது, ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குடியேறிகளின் நோக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஆஸ்திரேலிய அரசின் கடுமையான கட்டுப்பாட்டால் குடியுரிமைக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குடியுரிமைத் தொடர்பான புள்ளிவிவரம் விவரிக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள குடியேறிகளின எண்ணிக்கை 138,387 ஆகும். அதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. கடந்த 2017- 18 நிதியாண்டில் 239,413 குடியேறிகள் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவே, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையை இருக்கின்றது. இந்த ...
Read More »அவுஸ்திரேலியாவில் சினம்கொள் திரைப்படம் வெளியீடு!
முப்பதாண்டுகளாக சிறுக சிறுக கட்டமைத்த தேசத்தின் வாழ்வோடு வாழ்ந்த மக்களின் உணர்வுகள் மறக்கப்பட்டுவருவதாக பரப்பப்படும் மாயைகளுக்கு மத்தியில், இன்னமும் அந்த வேட்கை உயிர்ப்போடு வெவ்வேறு தளங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மைநிலையை வெளிக்கொண்டுவரும் ஒரு உன்னத படைப்பாக வெளிவந்துள்ளது சினம்கொள் என்ற ஈழத்து திரைப்படம். ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஆதரவு கொடுக்கப்பட்டு வெளியீடு செய்யப்படுகின்ற இத்திரைப்படம் அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்திரைப்படத்திற்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்கி இத்தகைய படைப்புகளை ஊக்கப்படுத்தவேண்டும். திரைப்படம் வெளியாகும் திரையரங்க விபரங்கள் SYDNEY ...
Read More »நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் மீட்பு!
கடற்படையினரும் காவல் துறைக்கு இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
Read More »ஐ.தே.முவின் தலைமைத்துவம் சஜித்துக்கு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அமைக்கப்படவுள்ள பொதுக் கூட்டணியின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (30) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதோடு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவையே களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் நால்வர் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »கொந்தளிப்பான சூரியனின் மேற்பரப்பு!
சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வானியற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான அமெரிக்காவின் தேசிய ...
Read More »