ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அமைக்கப்படவுள்ள பொதுக் கூட்டணியின் தலைமைப் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க அக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (30) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதோடு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸவையே களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான ஐ.தே.க செயற்குழு உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதோடு, அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் நால்வர் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.