ஆஸ்திரேலியாவில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மந்தநிலையினால் தற்காலிக விசாக்களில் உள்ள 19,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில் தெரிவித்துள்ளது. அத்துடன் 14,000 பேர் வீடற்ற நிலைக்கு செல்லக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் Bridging Visas எனப்படும் இணைப்பு விசாக்களில் உள்ளவர்களும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள அகதிகளும் வேலைகளை இழந்தால் அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்கு அரசால் வழங்கப்படும் JobSeeker, JobKeeper பண உதவிகள் எதும் வழங்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு ஈரானிலிருந்து ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா வீரர்கள்
சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வுக்கு பிறகு நாசா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. கடந்த மே 31-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் மூலம் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் ...
Read More »வயற்காணித் சுத்தப்படுத்தலை தடுத்து இராணுவத்தினர் அடாவடி..
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை பகுதியிலுள்ள கரிவேப்ப முறிப்பு, எருக்கலம்பிலவு மற்றும், நெடுங்கேணி கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட தனிக்கல்லு ஆகிய வயற்காணிகளை, பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகள் சுத்தம் செய்யும்போது, இராணுவத்தினர் குறித்த வயற்காணிகளைத் சுத்தம் செய்வதைத் தடுத்துள்ளனர். இராணுவத்தினுடைய குறித்த அடாவடிச் செயற்பாட்டினை, விவசாயிகள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் குறித்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமை ஆராய்ந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலைப் பகுதியில், கருவேப்ப முறிப்பு குளத்தின் கீழ் ...
Read More »தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக உபாலி தேரர் நியமனம்
புத்திசாதூர்யம் மிகுந்த நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடாத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம் இன்று முற்பகல் தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது. இம்முறை தர்ம போதனை, சொலொஸ்மஸ்தானாதிபதி கெடிகே ரஜமஹா விகாராதிபதி அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய உபாலி தேரரினால் நடத்தப்பட்டது. தொல்பொருள் ஆலோசனை குழுவில் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் நியமிக்கப்பட்ட நிலையில் இதன்போது அதற்கான நியமனத்தை பிரதமர் வழங்கியதுடன், நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக ...
Read More »கொழும்பை சுற்றி வளைப்போம் :ராஜபக்சக்களின் இராணுவத்தை கண்டு அஞ்சமாட்டோம் – ஞானசார தேரர் சூளுரை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு நாளைமறுதிம் செவ்வாய்கிழமை அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால் ஆயிரக்கணக்கான பௌத்தமத குருமார்களை ஒன்றிணைத்து கொழும்பை சுற்றிவளைப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மேலும் ராஜபக்ஷக்களின் இராணுவத்தினரைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த அரசாங்கத்திலும் கிழக்கு முனையம் தொடர்பில் ஒப்பந்தம் செய்வதற்கு ...
Read More »ஷானி அபேசேகர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் சுகயீனம் காரணமாகவே ஷானி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஷானி அபேசேகர அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வார்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சரத் பண்டார மற்றும் காவல் துறை இருவர் உள்ளிட்ட 22 பேர் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே தமிழ் மக்களுக்கான கட்சி
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் அதன் விளைவுகளையும் தமிழ் மக்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வலியுறுத்தி விட்டு தேர்தலுக்குப் பின் அதற்கு நேரெதிராக தான் செயற்பட்டார்கள். இதுதான் வரலாறு. இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாடாளுமன்றில் இருக்க கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் அதற்குப் ...
Read More »வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் 4 மாதம் விளையாடும் நியூசிலாந்து வீரர்
வெளிநாட்டு 20 ஓவர் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் 4 மாதம் விளையாடுகிறார். 8-வது கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் வருகிற 18-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் ...
Read More »உரிமைக்காக உழைக்ககூடியவர்களை தெரிவு செய்க!
பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகட்கூறுபவர்களையும் தெரிவுசெய்ய தவறாது எமது வாக்குரிமையையும் விருப்புவாக்குகளையும் பயன்படுத்துவோம் என தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாதகட்சிகளையும் அவற்றை தேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும் அவற்றால் இறக்கப்பட்டுள்ள குழுக்களையும் நிராகரிப்போம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் விற்பதை தவிர்ப்போம் என ...
Read More »இறந்தபிறகும் 8 பேருக்கு வாழ்க்கை கொடுத்த கேரள வாலிபர்
மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள வாலிபர் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் பார்த்த அவர், கையிலிருந்த சிகப்பு பையை தூக்கிப் பிடித்தபடி அரைமணி நேரம் ஓடியிருக்கிறார். ஆபத்தைப் புரிந்து கொண்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. டிரைவராக பணிபுரிந்துவந்த அனுஜித். ...
Read More »