பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகட்கூறுபவர்களையும் தெரிவுசெய்ய தவறாது எமது வாக்குரிமையையும் விருப்புவாக்குகளையும் பயன்படுத்துவோம் என தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாதகட்சிகளையும் அவற்றை தேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும் அவற்றால் இறக்கப்பட்டுள்ள குழுக்களையும் நிராகரிப்போம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் விற்பதை தவிர்ப்போம் என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் பேரவை இவ்வாறானவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தி எமது இருப்பினையும்கேள்விக்குள்ளாக்கிவிடும் எனவும் தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal