சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் சுகயீனம் காரணமாகவே ஷானி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஷானி அபேசேகர அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வார்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சரத் பண்டார மற்றும் காவல் துறை இருவர் உள்ளிட்ட 22 பேர் தங்கியுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal