புத்திசாதூர்யம் மிகுந்த நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடாத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம் இன்று முற்பகல் தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இம்முறை தர்ம போதனை, சொலொஸ்மஸ்தானாதிபதி கெடிகே ரஜமஹா விகாராதிபதி அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய உபாலி தேரரினால் நடத்தப்பட்டது.
தொல்பொருள் ஆலோசனை குழுவில் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் நியமிக்கப்பட்ட நிலையில் இதன்போது அதற்கான நியமனத்தை பிரதமர் வழங்கியதுடன், நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் இதன்போது அக்ரஹார காசியப்ப தேரரினால் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.