Tag Archives: ஆசிரியர்தெரிவு

நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி

தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச்சீட்டும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் ...

Read More »

கோட்டாவை சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

Read More »

கண்மூடித்தனமாக கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது

இலங்கையில் முஸ்லீம்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும் கண்மூடித்தனமாக கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பத்தாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானம்-தகவல்தொடர்பில் தவறான விடயங்களை கொண்டுள்ளது-அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பன்முக முன்னேற்றத்தை கருத்தில் கொள்வில்லை ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பம் விடுதலை!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் பேர்த்தில் வசிப்பதற்கு அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் அலெக்;ஸ் ஹாக் அறிவித்துள்ளார். பேர்த்தில் அவர்கள் சமூக தடுப்பு முறையின் மூலம் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலம் நான் எல்லைகளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான கொள்கைகளையும் தடுப்பில் உள்ள சிறுவர்கள் தொடர்பான கருணையையும் சமநிலைப்படுத்தியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றை தீர்மானம் குடும்பத்தை கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலிருந்து விடுதலை செய்கின்றது,அவர்கள் தங்கள் கிசிச்சையை முன்னெடுக்க உதவுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தீர்மானம் ...

Read More »

கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றோர் விடுதலை செய்யப்பட வேண்டும்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு முன்னர், அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்பதை நம்பக்கூடியதாக இருக்கும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதன் முதற்கட்ட நடவடிக்கையாக அச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம் போன்றவர்கள் விடுவிக்கப்பட்டால், அவர் ...

Read More »

நான் ஏன் நாடாளுமன்றம் செல்கின்றேன்’?

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நாடாளுமன்றம் செல்வதற்கு ; நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக ...

Read More »

பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குக

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன. நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ...

Read More »

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, ...

Read More »

ஆஷஸ் தொடருக்கு உதவாது: வாகன் எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பின்னர், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்திய தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியில் ஒருநாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த ஆட்டம் ...

Read More »

39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்

ஜியோனா சனா என்பவரின் குடும்பத்தால் மிசோரமின் ஒரு கிராமம் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் காலமாகிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார். மேலும், ஜியோனா தானாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என முதலமைச்சர் ...

Read More »