ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.