ஜியோனா சனா என்பவரின் குடும்பத்தால் மிசோரமின் ஒரு கிராமம் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது
மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் காலமாகிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜியோனா தானாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என முதலமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal