மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேடுதல்களின் போது மௌலவியொருவர், உட்பட 12 பேர் இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்டு மன்னார் காவல் துறையினரிம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்ற இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேக நபர்களும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கோட்டேகொட நியமனம்!
ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட, பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (29) நண்பகல், ஜனாதிபதி செயலகத்தில், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Read More »இலங்கையை ஏன் தாக்கினோம்? -ஐ.எஸ் தலைவர்
சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இறுதிப் போரின் ...
Read More »அமெரிக்காவில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். ...
Read More »கோப்பி சுவையுடன் ஊக்க பானமாக புதிய கொக்கொ கோலா!
புதிய கோப்பிச் சுவையுடன் கூடிய ஊக்கபானத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொக்கொ கோலா நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த ‘ரகசிய மருந்து’ தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு ‘ கொக்கொ கோலா’ என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கொக்கொ ...
Read More »வெளிநாட்டுப் பிரஜைகள் 13 பேர் கைது!
கொழும்பை அண்டிய பகுதிகளான நவகமுவ, கல்கிஸ்ஸை, வெலிகட மற்றும் தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் காரணமாககாவல் துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய கொழும்பை அண்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக வீசாவின்றி தங்கியிருந்த பெண்ணொருவர் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை காவல் துறை ...
Read More »யாழில் வாள்வெட்டு!
அசாதாரண சூழ்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. யாழ்.சாவகச்சேரி தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நேற்றைய தினம் ...
Read More »இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு சான்றிதழ்!
சகிப்புத்தன்மையை நோக்கி முன்னேறிச் செல்லும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் தாய்க்கும் இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது. இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் ...
Read More »மீரிகமையில் ஆடை கொள்வனவு செய்துள்ள தீவிரவாதிகள்!
கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாத குழுவின் உறுப்பினர்களுக்கு மீரிகம- கிரிஉல்லயில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரும் மீரிகம காவல் துறை இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டில் காணப்பட்ட பையில் குறிப்பிட்டப்பட்ட முகவரித் தொடர்பில் விசாரணைகளை நடத்தியகாவல் துறை, கடந்த 19ஆம் திகதி முகத்தை முழுவதுமாக மறைத்த நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தில் 3 பெண்கள் ...
Read More »ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் கருவியுடன் ஒருவர் கைது!
ஒரே நேரத்தில் 8 அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய தொடர்பாடல் கருவி மற்றும் ரவுட்டர், கத்திகள் இரண்டுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ- கல்லெலிய பிரதேசத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 8 சிம் அட்டைகளை ஒரே தடவையில் குறித்த தொடர்பாடல் கருவி ஊடாகப் பயன்படுத்த முடியும் என்றும், இந்த சிம் அட்டைகள் வெளிநாடுகளுக்கு இலவசமாக அழைப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டதென்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வெயங்கொட பகுதியில் ஓட்டோவொன்றை சோதனையிட்ட போது, அதில் சந்தேகத்துக்கிடமான முறையில்வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவரும் இளைஞரொருவரிடமும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal