Tag Archives: ஆசிரியர்தெரிவு

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்! கடற்படை வீரர் கைது!

2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவரே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். ரத்கம பிரதேசத்தைச் ​சேர்ந்த 41 வயதுடைய கடற்படை வீரரரே கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட இளைஞர்களில் மூன்று இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த கடற்படை வீரர் நேற்று இரவு கைது ...

Read More »

19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாம்!

தூய்மையான அரச நிர்வாகத்திற்காக தன்னால் உருவாக்கப்பட்ட 19வது திருத்தம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார். 2015 ஜனவரி 08ஆம் திகதி தனது தேர்தல் பிரகடனத்தில் இந்த நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்ப மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 215 பேரின் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை மைத்ரி நினைவுகூர்ந்தார். நேறறு (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே 2015 ஜனவரி 08ஆம் திகதி ...

Read More »

உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.

Read More »

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு !

அகதிகளின் மருத்துவ உதவிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் தங்கள் மருத்துவ உதவிகளை மேற்கொள்ள அவுஸ்திரேலியாவின் சில நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ உதவிகள் தொடர்பாக இனிமேல் கிறிஸ்துமஸ் தீவுக்கு அவர்கள் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1 பில்லியன் டொலர் செலவில் கிறிஸ்துவ முகாமில் வசதிகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ உதவிகளையும் தாண்டி மேற்கொண்டு வசதிகள் ஏதும் தேவைப்பட்டால் ...

Read More »

கைதானவர்களிடமிருந்து ஆயுதம் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்துள்ள யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு விசேட காவல் துறை  அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டுக் கும்பலொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்துயிருந்தது. இதன் போது அங்கிருந்த வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில் யாழ். மாவட்ட விசேட குற்ற ...

Read More »

சி.ஆர்.டி. மையத்திற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி விஜயம்!

பாதுகாப்பு அமைச்சினால், பாதுகாப்பு தொடர்பான நவீன இராணுவ ஆயுத தயாரிப்பு, புதிய தொழில்நுட்ப பொருட்கள் மற்றும் அனைத்து பிற உபகரணங்களின் உற்பத்திக்களுடன் ஹோமகம, பிட்டிபணயில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு (சி.ஆர்.டி), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்றைய தினம் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சி.ஆர்.டி மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற முன்னாள் பிரிகேடியர் டிரான் டி சில்வா, இராணுவ தளபதிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவ தளபதி இந்த நிலையத்தை பார்வையிடுவதற்கு வருகை தந்தார். மின்னணு பிரிவு, தொழில்நுட்ப ...

Read More »

இம்ரான்கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுகிறார்!

இம்ரான்கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக அவரது முன்னாள் மனைவி ரெகம்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையொட்டி இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. எனினும் பாகிஸ்தான் அரசு இது குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி பேசிய அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கான் புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் ...

Read More »

எச்சரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் !

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது எனக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்காரர்களை குறிவைத்து 15 நாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. தஞ்சக்கோரிக்கையாளர்கள் அதிகமாக வெளியேறும் நாடுகளாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இடைப்பட்ட நாடுகளாக உள்ள இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை குறிவைத்து இக் காணொளி பரப்பப்படுகின்றது. அந்த எச்சரிக்கை ...

Read More »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி!

யாழ்.மாநகர சபை உறுப்பினரின் வீட்டுக்கு சென்ற வாள் வெட்டுக்குழு உறுப்பினரை தாக்க முயற்சித்த போது, உறுப்பினர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் செ.ரஜீவ்காந்தின் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினரின் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீட்டிற்குள் புகுந்து உறுப்பினர் மீது தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். அதன் போது தாக்குதல் குழுவிடமிருந்து தப்பியோடியதையடுத்து சில நிமிடங்கள் குறித்த ...

Read More »

ஊடகவியலாளரை தாக்கியமைக்காக காவல் துறைபொறுப்பதிகாரியை கைதுசெய்ய உத்தரவு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொளிப் பதிவில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரியைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக காவல் துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் காவல் துறை நிலைய பதில் பொறுப்பதிகாரி தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு ...

Read More »