2008/2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவரே குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய கடற்படை வீரரரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர்களில் மூன்று இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த கடற்படை வீரர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal