Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் தாமதிப்பது முறையல்ல!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், விடுதலையை ஆளுநர் தாமதிப்பது முறையல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில் எந்தக் காரணமும் இல்லாமல் ஆளுநர் ...

Read More »

திட்டமிடப்பட்ட நில அபகரிப்பு!

திருகோணமலை,  கோணேசபுரி வனப் பகுதியை, வனப் பாதுகாப்புத் திணைக்களம், திட்டமிட்டு அபகரிப்பதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உப்புவெளிப் பிரதேச சபை உறுப்பினர் ச.விவுசன் குற்றஞ்சாட்டினார். திருகோணமலை,  சாம்பல் தீவு 06ஆம் வட்டாரப் பகுதி, ஆத்திமோட்டை, கோணேசபுரி, சாம்பல்தீவு குடியிருப்புப் பிரதேசங்களின் நடுவில் காணப்படுகின்றது. இதனுள் இரு கிராமங்களை இணைக்கும் வீதிகள்,  குடியிருப்புக் காணிகள், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள் காணப்படுவதாகவும் இவற்றையே, வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அடையாளக்கல் இட்டு, முற்றுகையிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்களின் நிலங்களும், பொது இடங்களும் பரவலாக ...

Read More »

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் ரணில் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமண நிகழ்வில் விசேட அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.   தனது மகனின் திருமணத்திற்கு வருகைத் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே பிரதமர் இன்று திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ரோஹித ராஜபக்ஷ அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ ஆகியோர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலை!

அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ பற்றியுள்ளது. இதனால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் அசாதாரண நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த காட்டுத் தீயை அணைப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் தீ பரவலாம் ...

Read More »

வெனிசுலாவில் நீடிக்கும் அரசியல் மோதல்!

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவு போராட்டங்களின்போது ஏற்பட்ட மோதல்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ...

Read More »

யாழில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு!

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன. இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து  இன்று அழிக்கப்பட்டுள்ளன. குறித்த வெடிகுண்டுகள் பல வருடங்கள் ...

Read More »

இளம் பிக்குவை கடுமையாக தாக்கிய சிரேஷ்ட பிக்கு!

இளம் பிக்கு ஒருவர், சிரேஷ்ட பிக்கு ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இச்சம்பவம், காலி அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் பதிவாகியுள்ளதோடு பிரதேச மக்களிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அஹுன்கல்ல, கெகரிவத்த பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் உள்ள சிரேஷ்ட பிக்கு ஒருவர் அங்கிருந்த இளம் பிக்கு ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அறிந்த பிரதேச மக்கள் உடனடியாக 119 என்ற காவல் துறையினரின்  அவசர தொலைபேசி பிரிவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சிறுவனான ...

Read More »

அவுஸ்திரேலியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நபர் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது விந்தணுவை தானமாக கொடுத்து 19 குழந்தைகள் பிறந்துள்ளது. விந்தணுவை தானமாக கொடுத்த அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த நபர் தற்போது பாரிய பிரச்சனையை சந்தித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு Ian Wood என்பவர் தனது விந்தணுவை விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், 19 குழந்தைகள் பிறந்துள்ளது. 15 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குகின்றனர்.

Read More »

பனி வீழ்ச்சியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி!

வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும்.  இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.  இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று,  புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது. இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ...

Read More »

சீனாவில் பிரமிப்பூட்டும் பனி நீர்வீழ்ச்சி!

சீனாவின் கடும் பனிப்பொழிவால் விழும் அருவியின் அழகை மேலும் அழகூட்டும் வகையில் பனி உறைந்து கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது. தற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஷான்டாங் மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில பிரமிப்பூட்டும் காட்சிகளை உருவாக்கியுள்ளது. இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பனி கொட்டித் தீர்த்து நீர்வீழ்ச்சி, பனி வீழ்ச்சியாக மாறி காணப்படுகிறது. வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், மணற்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு அதிர்ச்சியூட்டும் பனி அடுக்கை ஏற்படுத்தியுள்ளது. லிங்க்சுவன் கவுண்டியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில், ...

Read More »