சீனாவின் கடும் பனிப்பொழிவால் விழும் அருவியின் அழகை மேலும் அழகூட்டும் வகையில் பனி உறைந்து கண்கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.
தற்போது நிலவி வரும் குளிர்கால நிலை, வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஷான்டாங் மலைப் பள்ளத்தாக்கு பகுதியில் சில பிரமிப்பூட்டும் காட்சிகளை உருவாக்கியுள்ளது. இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக பனி கொட்டித் தீர்த்து நீர்வீழ்ச்சி, பனி வீழ்ச்சியாக மாறி காணப்படுகிறது.
லிங்க்சுவன் கவுண்டியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில், பல்வேறு வடிவங்களில் வசந்த கால நீர்வீழ்ச்சிகள் உறைந்து வெள்ளிப் பாறைகள் போல் காட்சி அளிக்கின்றன.
நதி செல்லும் வழியில், நீர் வெண்பனியாய் உறைந்து இருக்க, அதன்வழியாக வழிந்தோடும் நீரும் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இது காண்போர் கண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வழகை காண பலரும் உற்சாகத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal