அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ பற்றியுள்ளது. இதனால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் அசாதாரண நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது.
காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த காட்டுத் தீயை அணைப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் தீ பரவலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal