விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதியன்று நீர் பெறுவதற்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மோட்டார் குண்டுகள் பல மீட்கப்பட்டன.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டன.
இந்நிலையில் குறித்த கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிகுண்டுகள் பல வருடங்கள் பழமை வாய்ந்தவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal