வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று, புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது.
இதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு பனி சுவர் போன்ற அமைப்பு உருவானது. இதனையடுத்து பார்வையாளர்கள்  நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புத காட்சியினை படம் பிடித்து  சமூக ஊடகங்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல்  கடந்த ஆண்டும், இதே சீசனில் நீர்வீழ்ச்சிகள் உறைந்தது குறிப்பிடத்தக்கது.
 https://www.youtube.com/watch?v=6oMuTyGfKWE
										
									 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				