தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களை அவமதிக்க வேண்டாம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இதனுடன் தொடர்புபடாதவர்களை அவதிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் முக்கிய காரணி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது!
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு ...
Read More »மாணவர்கள் கடத்தப்பட்டமையை அறிந்திருந்தேன்!
தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் குறித்து விசாரித்து வரும் குற்ற விசாரணைப் பிரிவு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. தமது விசாரணைகளின்போதே தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டார் ...
Read More »விக்கி மீண்டும் சம்மந்தனோடு மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடக்கு ...
Read More »ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா விலகல்!
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ...
Read More »தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் கடந்த 3 மாதங்களில் 12 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) நிதி திரட்டி உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி செனட் சபை ...
Read More »முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04.07.19) கேப்பாபுலவு படைத்தலைமையகத்துக்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் பழைய பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தினை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் காவல் துறை , படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த ...
Read More »புராதன நகராக ஜெய்ப்பூர் தேர்வு – யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு
யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது. ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட்டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு ...
Read More »10 இராணுவத்தினர் படுகாயம்!
அட்டாலைசேனை நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »
Eelamurasu Australia Online News Portal