சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்!

தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.

ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும்.

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 மாடி கட்டிட உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டத் தொடங்கப்பட்டது.
ஜிமிங்சான்ஷெங் மேம்பாலம்

இதற்கு ‘ஜிமிங்சான்ஷெங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம்  கிட்டதட்ட தயாராகி விட்டது. பணியில் ஈடுபட்டபோது சுண்ணாம்புக் கற்கள் மற்றும் கரடு முரடான நிலப்பகுதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், 3 வருட உழைப்பு வீணாகாமல் சரியான முறையில் செயல்பட்டு இதர பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மேம்பாலம் தென்மேற்கு சீனாவின் யுனான், குய்சோ, சிச்சுவான் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபின்னர் சீனாவின் பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.