Tag Archives: ஆசிரியர்தெரிவு

சஹ்ரானின் மனைவி தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்கலாம்!

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என   நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார். நேற்று மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான  மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ரி கபூர் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இஸ்லாம் என்பது மனித உரிமையை அங்கீகரித்த ஒரு மார்க்கம்.ஒரு மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் அவசியமோ ...

Read More »

டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி ...

Read More »

பெண் பத்திரிகையாளரே இலங்கையிலிருந்து வெளியேறுக!

டுவிட்டரில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட கருத்திற்காக அவரை இலங்கையை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா  கடற்படையின் முன்னாள் பிரதானியும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளருமான மொகான் விஜயவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளமைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் பேருந்து புகையிரத பிரயாணங்களின் போது பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களிற்கு  உள்ளாவதை சுட்டிக்காட்டி பெண் பத்திரிகையாளர்  பதிவு செய்த கருத்திற்காக முன்னாள் கடற்படை அதிகாரி அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பதிவிட்டுள்ளார் வக்கிர மனோபாவம் கொண்ட நபர் ...

Read More »

வத்தளையில் தமிழ் பாடசாலை! – இன்று அடிக்கல் நாட்டு விழா!

வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறுகின்றது. இது தொடர்பான நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். முதலாம் தரத்தில் இருந்து வத்தளையில் செயற்படும் தமிழ் மொழிமூல ஒரு தேசிய பாடசாலையாக இப்பாடசாலை அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடசாலைக்காக 4 மாடி கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீட்டு தொகையாக சுமார் 8 கோடி ரூபாவாக மதிப்பிடிப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட ஒதுக்கீடாக 3 ...

Read More »

பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு!

பப்புவா நியூகினியா நாட்டில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே நிகழ்ந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். பசிபிக் பெருங்கடல் தீவு நாடு, பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்த நிலையில், அங்கு இரு பழங்குடி இன மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். 3 நாட்களாக நடந்து வந்த இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். ...

Read More »

நீண்ட நாள் போராட்டத்தின் பின் மீன் பிடிக்க இரு தமிழ் மீனவர்களுக்கு அனுமதி!

நீரியல் வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை  மற்றும் சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் ...

Read More »

தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்!

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கேனர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகவிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அனைவரும் கைது செய்யபட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக ...

Read More »

இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில், ...

Read More »

மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் !

மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழித்­தி­ருப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்கும் பல்­வேறு சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் இலங்­கையும் ஒரு அங்­க­மாகும் என்ற அடிப்­ப­டையில், அதனை மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது மிக முக்­கிய பிரச்­சி­னை­யாகும். எனவே மிகவும் குரூ­ர­மா­னதும், இழி­வா­ன­து­மான மர­ண­தண்­ட­னையை முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் உறு­தி­பூ­ணு­வ­துடன், அதற்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்று மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து அழைப்பு விடுத்­துள்ளார். மரண தண்­ட­னையை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு இலங்­கை­யர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என்று வலி­யு­றுத்தி மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள காணொளி ...

Read More »

தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்பாவிகளை விடு­விக்க வேண்டும்!

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலையடுத்து பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு,  தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சாதா­ரண அப்­பாவி முஸ்­லிம்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு கோரி முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, ஜனா­தி­பதியிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.   அர­சாங்­கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் எம்.பி. க்களுக்கும் ஜனா­தி­ப­திக்கும்  இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம்  ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்­றது. இதன்­போதே, பைஸர் முஸ்­தபா எம்.பி., ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் ...

Read More »