அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார்.
அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில், வர்த்தக பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வர்த்தக மந்திரிகள் சந்தித்து பேசுவது என முடிவானது.
இந்த நிலையில் இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறி உள்ளார்.