மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்திருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கையும் ஒரு அங்கமாகும் என்ற அடிப்படையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது மிக முக்கிய பிரச்சினையாகும்.
எனவே மிகவும் குரூரமானதும், இழிவானதுமான மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூணுவதுடன், அதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.
மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.