தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்பாவிகளை விடு­விக்க வேண்டும்!

ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலையடுத்து பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு,  தற்­போது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சாதா­ரண அப்­பாவி முஸ்­லிம்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு கோரி முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீல.சு.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைஸர் முஸ்­தபா, ஜனா­தி­பதியிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

 

அர­சாங்­கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் எம்.பி. க்களுக்கும் ஜனா­தி­ப­திக்கும்  இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம்  ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்­றது.

இதன்­போதே, பைஸர் முஸ்­தபா எம்.பி., ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் சார்பில் மேற்­கண்­ட­வாறு வேண்­டுகோள்  விடுத்தார். கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் மற்றும் மெள­ல­வி­மார்கள் அடங்­கிய 36 பேரை விடு­விக்கக் கோரியும் பைஸர் முஸ்­தபா எடுத்­து­ரைத்தார்.

இவர்­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் இவர்­களின் விடு­தலை குறித்து சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இரா­ணுவத் தள­பதி ஆகி­யோ­ருடன் பேசி உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தான் கூறி­ய­தாகக் கூறு­மாறும்  பைஸர் முஸ்­தபா எம்.பி. யிடம் ஜனா­தி­பதி  தெரி­வித்­துள்ளார். அத்­துடன் இது தொடர்­பி­லான ஒப்­பந்தம் ஒன்­றிலும் ஜனா­தி­பதி கைச்­சாத்­திட்டார்.

இதே­வேளை, ஜனா­தி­ப­தியின் இந்த வேண்­டு­கோளை  அடுத்து, பைஸர் முஸ்­தபா எம்.பி. உட­ன­டி­யா­கவே  பதில் பொலிஸ் மா அதிபரையும் நேற்று சந்தித்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.  இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, பைஸர் முஸ்தபா எம்.பி.யின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.