Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர்தோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

அவுஸ்திரேலியாவில் 3 புதிய விசா பிரிவுகளை அவுஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் சமூகத்தினருக்கு பயன்தரும் வகையில் இந்த விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் சமூகத்தினர் நீண்டநாட்களாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இப்புதிய 3 வகை விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் David Coleman இதனை தெரிவித்துள்ளார். இம்மூன்று புதிய விசாக்களில் முதலாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தற்காலிக பெற்றோர் விசாவாகும். எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம். Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் ...

Read More »

பாகிஸ்தானில் 22 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகிறது!

பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய விமானப்படை கூறியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அதையடுத்து, இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இத்தகைய சம்பவங்களால், இந்தியா–பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் எத்தகைய அச்சுறுத்தலையும் சந்திக்க முழு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய படைகள் தெரிவித்தது. இதற்கிடையே பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ...

Read More »

மன்னார் மனித புதைக்குழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!

மன்னார் மனிதப் புதைக்குழியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகளை, மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று (08) உத்தரவிட்டுள்ளார். குறித்த புதைக்குழியிலிருந்து, அகழ்வின் மூலம் பெறப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, மன்னார் நீதிமன்றம் நேற்று (07) அறிவித்ததையடுத்தே, அகழ்வுப் பணியாளர்களுக்கு, இன்றைய தினம் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

Read More »

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க ஒத்துழைப்பு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

Read More »

சிறிலங்கா கடற்படையினரால் இன்று 30 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில், இலங்கையில் இருந்து இடம்பெயர முயற்சித்த 30 பேர்  சிறிலங்கா கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 80 கடல் மைல் தொலைவில் படகு ஒன்றில் இருந்த குழுவினர் இன்று அதிகலை கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது. தெற்கு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் கடற்படை படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Read More »

இரண்டு இலட்சம் கையொப்பங்களை பெற்ற ஈழத்தம்பதி!

அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் இணைய மனுவொன்றில் இதுவரையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் இருந்து கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் புகலிட கோரிய நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளான கோபிகா, தருணிக்கா ஆகியோரை குடிவரவுத் துறை அதிகாரிகள் நாடுகடத்துவதற்காக கொண்டு சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்பட இருந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் பகுதியை சேர்ந்த மக்கள் ...

Read More »

யாழில் சமாதான நீதவானின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல்!

யாழ்ப்பாணம், மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கொடாரிகளால் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரி காவல் துறை  மற்றும் 119 அவசரகாவல் துறைக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல் துறை உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் ...

Read More »

முகமூடிக் கும்பல் வீடு புகுந்து தாக்குதல்!

முகங்களை மூடிய மூன்று பேர் வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் வீட்டுக்கு வெளியே இருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளரின் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள 2வது உயிரிழப்பு இதுவெனக் கூறப்படுகிறது. ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் ...

Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்!- ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலாரி தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் 2020ம் ...

Read More »