அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு கோரும் இணைய மனுவொன்றில் இதுவரையில் சுமார் இரண்டு இலட்சம் பேர் கையொப்பமிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் இருந்து கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் புகலிட கோரிய நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளான கோபிகா, தருணிக்கா ஆகியோரை குடிவரவுத் துறை அதிகாரிகள் நாடுகடத்துவதற்காக கொண்டு சென்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாடு கடத்தப்பட இருந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், அரசிற்கு எதிராகவும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்த நிலையில், நாடு கடத்தும் உத்தரவு மீளப்பெறப்பட்டது.
இந்நிலையில் அவர்களை விடுதலை செய்வதுடன், நீதி வழங்கப்படவேண்டும் என்று கோரும் இணைய மனுவொன்று உருவாக்கப்பட்டது.
நிலையில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் பேர்வரையில் கையொப்பம் இட்டுள்ளனர்.
அத்துடன் குயின்லாந்தைச் சேர்ந்த வாசிகள் மைய ஊடக பத்திரிகைகளில் நீதிகோரும் விளம்பரங்களையும் பிரசுரித்து கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.