நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக இருந்தால் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
கலென்பிந்துனுவவெ பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முதலில் யோசனை கொண்டு வந்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வறுமையை ஒழிப்பதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal