யாழ்ப்பாணம், மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கொடாரிகளால் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
சாவகச்சேரி காவல் துறை மற்றும் 119 அவசரகாவல் துறைக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல் துறை உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				