ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை அனைவரும் விரும்பலாம். ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை. காரணம் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் கோதாபய ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக ஜுலை 7ல் தீர்மானம் !
பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம் பிக்குகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவும் அனைத்து இன மக்களையும் ஒரு சட்டத்திற்கு கீழ் கொண்டு வருவதுமே இந்த மாநாட்டின் முக்கிய விடயமாகமென பொதுபலசேனா தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டிற்கான அஸ்கிரிய , மல்வத்து மற்றும் சியம் ஆகிய முக்கிய மூன்று பௌத்த பீடங்களின் ...
Read More »பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்!
மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ வென்றுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக பிரியா கூறுகையில், எனக்கு இது முதல் அழகிப் போட்டி. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்குபெற்றது கிடையாது. மாடலிங் செய்ததும் கிடையாது. ...
Read More »அவுஸ்திரேலியாலில் இருந்து சிறிலங்கா சென்ற தம்பதி கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கணவன், மனைவி தம்பதி ஒன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ...
Read More »ஜப்பானில் ஜி20 மாநாடு தொடங்கியது!
ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து ஒளிப்படம் எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். ...
Read More »காத்தான்குடியிலிருந்து பெருந்திரளான வெடிபொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் ஐ.எஸ் ஐ.எஸ். பயங்ரவாதிகளின் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்நைட் குச்சிகள், டெடனைடர்கள் உட்பட பெரும் திரளான வெடிபொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது ...
Read More »ஜா-எல, ஏக்கல பள்ளி வாசலை அகற்றுக!
சிறிலங்காவில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைஆமையைக் கருத்திற் கொண்டு, ஜாஎல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிஆவாசலை உடன் அங்கிஆருந்து அகற்றுஆமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. ஜாஎல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கஆரஆவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறும் குறித்த ...
Read More »இந்தியாவுக்கு இடம் அளிக்க பாகிஸ்தான் திடீர் ஆதரவு!
ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக ...
Read More »சிரேஷ்ட ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார். வீரகேசரி பத்திரிகையில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த இவர், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார். அத்துடன் தினபதி,சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ள இவரது சேவையைப் பாராட்டி, இலங்கைப் பத்திரிகைப் பேரவை “ வாழ்நாள் சாதனையாளர்“ விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Read More »கன்னியாவில் பௌத்த போதி அமைக்க நிலம் கோரியுள்ள விகாராதிபதி!
கன்னியாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகுதியை கையகப்படுத்த கன்னியா விகாராதிபதி மீண்டும் முயற்சி எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்குரிய ஏற்பாடாக காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று கன்னியாவில் இடம்பெறவுள்ளதாகவும் இது தொடர்பாக கன்னியா தென்கயிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்னியா ஆலய நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வரலாற்றுப் புகழ்கொண்ட கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் புத்தபோதி ஒன்றை அமைப்பதற்கு நான்கு ஏக்கர் காணியை ஒதுக்கித்தரும்படி சுடுநீர்க் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal