சிறிலங்காவில் தற்போது நிலவும் பாதுகாப்பு நிலைஆமையைக் கருத்திற் கொண்டு, ஜாஎல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிஆவாசலை உடன் அங்கிஆருந்து அகற்றுஆமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான தெளஹீத் ஜமா அத்துக்குச் சொந்தமான ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பள்ளிவாசலை, அப்பிரதேசத்திலிருந்து உடன் அகற்றுமாறு கோரி கைச்சாத்திடப்பட்ட மகஜர் ஒன்றே கடந்த வாரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
ஜாஎல, ஏக்கல ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், பயங்கஆரஆவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ஆளது. இந்த மகஜரில் 2,100 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஏக்கல மக்கள் ஒற்றுமை அமைப்பின் ஊடாக, ஜாஎல பிரதேச செயலகம் மற்றும் ஜா – எல பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளன. ஏக்கல ஸ்ரீ வாலுகாராம புராண விகாரையின் பிரதானி நாரம்பனாவே விமலஜோதி தேரர் மற்றும் கொட்டுகொடை புனித கிறிஸ்தவ தேவாலய பரிபாலகர் சிறியானந்த பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலைப்படுத்தி, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.