ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை அனைவரும் விரும்பலாம். ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை. காரணம் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை புலம் பெயர் தமிழர்களின திட்டமிட்ட சதிச் செயல் என்று தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் கோதாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத்தில் தடையாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனவில் இருந்தே வேட்பாளர் நியமிக்கப்படுவார். வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடிய பின்னர் தீர்மானம் எடுக்கப்படும். சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் இன்னும் கலந்துரையாடல்களே இடம்பெற்று வருகின்றன. இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த விடயம் குறித்தும் ஆராய்ந்த பின்னரே வேட்பாளர் நியமிக்கப்படுவார்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை அனைவரும் விரும்பலாம். ஆனால் அவர் ஜனாதிபதியாவதை மக்கள் விரும்பவில்லை. காரணம் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதற்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமை டயஸ்போராக்களின் திட்டமிட்ட சதியாகும். இது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு தடையாக அமையாது.
Eelamurasu Australia Online News Portal