கன்னியாவில் பௌத்த போதி அமைத்து மீண்டும் அந்தப் பகுதியை கையகப்படுத்த கன்னியா விகாராதிபதி மீண்டும் முயற்சி எடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்குரிய ஏற்பாடாக காணியை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று கன்னியாவில் இடம்பெறவுள்ளதாகவும் இது தொடர்பாக கன்னியா தென்கயிலை ஆதீனம், தமிழர் சமூகம், ராவண சேனை, கன்னியா ஆலய நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
வரலாற்றுப் புகழ்கொண்ட கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் புத்தபோதி ஒன்றை அமைப்பதற்கு நான்கு ஏக்கர் காணியை ஒதுக்கித்தரும்படி சுடுநீர்க் கிணறு ரஜமகா விகாரை விஹாராதிபதி, திருகோணமலை பிரதேச செயலாளரிடம் கோரியதற்கு அமைய பிரதேச செயலாளர் ஒரு ஏக்கர் காணியை மேற்படி விஹாராதிபதிக்கு வழங்க ஆவன செய்யும்படி கிழக்கு மாகாண காணித் திணைக் களத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்தப் பணிப்புக்கு அமைய வெந்நீரூற்றுப் பகுதியை அண்டிய பகுதியில் காணி அளவீடு இன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கன்னியா வெந்நீரூற்றுப் பகுதிக்கு மேலு ள்ள பகுதியில் 2010ஆம் ஆண்டுக்குப் பின் உருவாக்கப்பட்ட விகாரை தொடர்பாக கன்னியா ஆலய பரிபாலன சபையும் இந்து மக்களும் தமது அதிருப்தியைத் தெரிவித்துவரும் நிலையில் கடந்த மே மாதம் 24ஆம் திகதியளவில் பழைமை வாய்ந்த கன்னியா பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மீண்டும் ஒரு புத்த போதியை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் மேற்படி போதி அமைப்புக்கு சமூக அமைப்புகள் காட்டிய எதிர்ப்பு காரணமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலையிட்டு தற்காலிகமாக போதி அமைக்கும் முயற்சிக்கு தடை விதித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அண்மையில் தொல்பொருள் திணைக்களத்துக்கும் சமூக அமைப்புகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலின்போது குறித்த விஹாராதிபதியும் பிரசன்னமாகியிருந்தார். அன்றைய தினம் குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் மனோ கணேசனும் கலந்து கொண்டு ஒரு சில உடன்பாடுகள் காணப்பட்டன.
இது இவ்வாறிருக்க கடந்த 19ஆம் திகதி மேற்படி விகாரையின் விஹாராதிபதி சுடுநீர்க்கிணறு ரஜமகா விகாரை என்ற முகவரியிட்டு கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் நான்கு ஏக்கர் காணியை வழங்கும்படி திருகோணமலை பிரதேச செயலாளரைக் கோரியுள்ள நிலையிலேயே ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க நில அளவீடு இன்று செய்யப்படவுள்ளதாகவும் பாரம்பரியம் மிக்க இந்நிலப் பகுதியை அவ்வாறு வழங்குவது பௌத்த ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யும் நடவடிக்கை என்பது மாத்திரமல்ல பழைமையான இந்து ஆலயங்கள் இருந்த இடத்தை கபளீகரம் செய்யும் முயற்சி என தென்கயிலை ஆதீனம், கன்னியா ஆலய பரிபாலன சபை, ராவணசேனை அமை ப்பு மற்றும் சமூக அமைப்புகள் தமது கண் டனத்தைத் தெரிவித்துள்ளன.
இந்தக் கெடுபிடி நிலை தொடர்பாக கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோருக்கும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal