மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

ஐ.எஸ் ஐ.எஸ். பயங்ரவாதிகளின் மட்டக்களப்பு ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்நைட் குச்சிகள், டெடனைடர்கள் உட்பட பெரும் திரளான வெடிபொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன்
தொடர்புடைய ஸஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முகமட் மில்ஹான் என்பவரிடம் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடியில் பெரும் திரளான வெடிபொருட்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இதனையடுத்து மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் ஸஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றை கடந்த மாதம் பொலிசார் கண்டுபிடித்தனர்.

அந்த முகாம் பகுதியில் சம்பவதினமான இன்று வியாழக்கிழமை கொழும்பில் இருந்து முகமட் மில்ஹானை அழைத்துசென்று நிலத்தை தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர்

இதன் போது எஸ்லோன் குழாயில் அடைத்து பாதுகாப்பாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 392 ஜெலக்நைட் எட்சோட் ரக வெடிமருந்து 8 கிலோ கிராம், சேருவின் 184 யார் கொண்ட 4 பக்கற்றுக்கள், ரி.56 ரக துப்பாக்கியின் 361 ரவைகள், எம்.16 ரக துப்பாக்கியின் ரவைகள் 80, திருப்பாச்சி வாள்கள் 11, சவுதி அரேபியாவில் மரணதண்டனைக்காக பயன்படுத்தப்படும் மதினா வாள்கள் 19, டெடனைட்டர் 1500 என்பனவற்றை குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.


Eelamurasu Australia Online News Portal