Tag Archives: ஆசிரியர்தெரிவு

போட்டியிலிருந்து விலகப்போவதுமில்லை ஏனையோருடன் இணையப்போதுமில்லை!

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அடுத்து வரும் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள மகேஷ் சேனாநாயக்க மற்றும் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் தம்முடன் இணைத்துகொள்ளவுள்ளதாகவும் அதற்குரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் ஜனாதிபதி ...

Read More »

லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர்; வியட்நாமைச் சேர்ந்தவர்கள்!

லண்டனில் லாரி ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை வியட்நாமைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ...

Read More »

தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும்!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் எமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு ...

Read More »

அர­சாங்கம் படு­கொ­லையைச் செய்­ததாக கூறிய கோத்தா!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை விவ­கா­ரத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தையும், நாட்­டையும் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா நீதி­மன்­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ காட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கிறார் என்று தெரி­வித்த சுகா­தார மற் றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, இவ்­வி­வ­கா­ரத்தின் உண்மை நிலையைப் புரிந்­து­கொள்­ளா மல் சில ஊட­கங்கள் தவ­றாகச் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன என்றும் சுட்­டிக்­காட்­டினார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது: ஊட­க­வி­ய­லாளர் லசந்த ...

Read More »

தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சம்!

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.   யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை ...

Read More »

பில்கேட்ஸுக்கு வந்த சோதனை!

உலக பணக்கார்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் நீடித்த பில்கேட்ஸ் 24 மணி நேரத்தில் நிலைதடுமாறிப் போனதை அறிந்து கொள்வோமா? அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு  முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்க கணினிசார் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  நிறுவனர் பில்கேட்ஸ் 1.25 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 24 ...

Read More »

தீபாவளி பண்டிகைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தி மொழியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மாரிசன் தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் ...

Read More »

கொழும்பில் கைதான 52 மாணவர்களுக்கும் பிணை!

கொழும்பில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 52 மாணவர்களையும் பிணையில் செல்ல கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறித்த மாணவர்கள் 52 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்ததுடன், கைதான மேலும் ஒரு மாணவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Read More »

குமார வெல்கம அதிரடி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய காட்சியையோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ ஆதரிக்க போவதில்லை என்று கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிறந்த ஒரு வேட்பாளருக்கே எனது வாக்கினை பதிவு செய்ய போவதாக குறிப்பிட்டார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்று 25 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை பாராட்டுவதற்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கான சுதந்திர காட்சியின் மூலம் கலந்துரையாடல் ஒன்று கிராண்ட் ஓரியன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ...

Read More »

வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை!

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். ...

Read More »