தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தி மொழியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மாரிசன் தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் கொண்டாடுவதால், தீப ஒளி திருநாளை தாம் எப்போதும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal