Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடிதம்!

“கொரோனா வைரசால் நாங்கள் எளிதில் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய, மரணம் கூட ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது,” என ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தங்களை சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அகதிகள் முன்வைத்துள்ளனர். குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள தாங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் சாத்தியமற்றது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் அறிவுரையிலேயே, தடுப்பில் உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று ...

Read More »

அப்பாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பிரபலங்களும், தனிநபர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தி என்று தலைப்பிட்டு ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய சச்சின்

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண ...

Read More »

கொரோனா குறித்து அறிய புதிய இணையதளம்

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய ...

Read More »

இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை!

இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுபேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த குற்றவாளிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ;பொதுமன்னிப்பளித்து விடுதலை ...

Read More »

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தா விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது என்ன ?

சிறிலங்கா  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பில் காணப்படும் அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷ செயலணியின் தலைவராகவும் பிரதமரின் மேலதிக செயலாளர் என்டன் பெரேரா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாகாண ஆளுநர்கள், பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை தலைவர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகார சபைகளின் ...

Read More »

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா வைரசை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை முடக்குவது மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மனித குலத்திற்கு பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. ...

Read More »

சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு உத்தரவு!

கொடுக்கல் வாங்கல்களையும், அத்தியாவசிய தேவைகளையும் கருத்தில் கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ள சகல வணிக வங்கிகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வங்கிகளின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பமாகியது. லங்கா சதோச மற்றும் பிக் மீ சேவையின் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நுகர்வோர் பிக் மீ செயலியின் மூலம் சதோச நிறுவனங்களுக்கு தமக்கு தேவைப்படும் பொருட்கள் தொடர்பில் அறிவித்தால் அவற்றை வீடுகளிலேயே ...

Read More »

”அம்மா நான் மரணித்து விடுவேனா?”

முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தாயொருவர் தனது மகனை நினைத்து கண்ணீர் வடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது ஐந்து வயது மகன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, மரண விளிம்பில் இருப்பதால் தான் மிகுந்த வேதனையுடன் இருப்பதாகவும், இதனால் ஒவ்வொரு தாய்மாரும் தனது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். குறித்த தாய் மேலும் குறிப்பிடுகையில், 30 வயதான தனக்கு, ஐந்து வயதுடைய மகனொருவர் இருப்பதாகவும், குறித்த குழந்தை மிகுந்த ...

Read More »

வைரஸ் எவ்வேளையிலும் தாக்கலாம் எங்களை விடுதலை செய்யுங்கள்!

அவுஸ்திரேலியாவின் விலாவூட் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு நூற்றிற்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். கொரோனாவைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தங்களை விடுதலை செய்யுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா எந்த தருணத்திலும் எங்கள் சூழலிற்குள் நுழையலாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் இலகுவாக பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளோம்,மோசமாக நோய்வாய்படக்கூடிய நிலையில் உள்ளோம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர்கள் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். அரசாங்கம் எங்களை எங்கள் குடும்பத்தவர்கள் ...

Read More »