இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதையே ஜனாதிபதியின் செயற்பாடு காட்டிநிற்கிறது. அவ்வாறு இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என்றால் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் கட்டம்கட்டமாக பொதுமன்னிப்பில் விடிவிக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுபேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது இந்த குற்றவாளிக்கு ஜனாதிபதி
கோத்தாபய ராஜபக்ஷ ;பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார். இதேபோல் திருகோணமலையில் குமாரபுரத்தில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிமறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி திருகோணமலையில் இடம்பெற்ற வழக்கை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதி மறுக்கப்பட்டது. அத்தகைய கொலைகளை செய்தவர்களை ஜனாதிபதியும் இலங்கை அரசும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துவருகின்றது.
இத்தகைய சம்பவங்களை செய்துவரும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை படுகொலை செய்தது சரி என்பதை நிலைநாட்டி வருகிறமையால் இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர் பார்ப்பது பயனில்லை என்பது எங்களுக்கு நூறு வீதம் புரியவைத்துள்ளார்கள், தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த சூழ்நிலையின் பின்ணணியில் தான் நாங்கள் அடுத்த கட்ட ; நடவடிக்கைகளை ; செய்ய ; வேண்டும். இவ்வாறு செய்வது குறிப்பாக ஜனாதிபதி சிங்கள பௌத்த பேரினவாத ஜனாதிபதியில்லை என்பதை நிரூபிப்பாராக இருந்தால் ஆகக் குறைந்தது 15 வருடங்களுக்கு மேலே தண்டனை வளங்கப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டவர்களை முதல்கட்டமாகவும், பத்து வருடங்களுக்கு மேலே சிறைச்சாலையில் இருப்பவர்களை இரண்டாவது கட்டமாகவும், ஏனையவர்களை முன்றாவது கட்டமாகவும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும்.
அவ்வாறு செய்யாது விடின் ;நாங்கள் இலங்கை என்ற ஒர் ஆட்சி அதிகாரத்திற்கு கிழே நாட்டிற்கு கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இத்தகைய செயற்பாடு எடுத்துகாட்டுகின்றது என்றார்.