கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி, மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாயை சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாயை இன்று வழங்கியுள்ளார்
Eelamurasu Australia Online News Portal