Tag Archives: ஆசிரியர்தெரிவு

வட ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியிருக்க வாய்ப்பு – விஞ்ஞானிகள் தகவல்

6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றியிருக்க வாய்ப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் மனிதர்கள் தோன்றியது எங்கு? எப்போது? என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டது. அதில் அல்ஜீரியா உள்பட சர்வதேச நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து கிழக்கே 300 கி.மீ. தொலைவில் உள்ள செடிப் என்ற இடத்தில் கற்களால் ஆன கூர்மையான ஆயுதங்கள் கிடைத்தன. இவை ...

Read More »

இராஜினாமா செய்யப்போவதில்லை! -மகிந்த ராஜபக்ச

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என சிறிலங்கா ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்தை கைவிடப்போவதுமில்லை  எனது பதவியை இராஜினாமா செய்யப்போவதுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.   நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாக நீதிமன்றம் வெளியிடும் அறிவிப்பை பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

மோடியை காமெடி பீஸ் ஆக சித்தரித்த அர்ஜென்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் மோடியை அர்ஜென்டினா நாட்டின் பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்ட ஊடகத்துக்கு கண்டனம் பெருகி வருகிறது. அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான ‘குரோனிக்கா டி.வி.’யில் ஒரு ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. ‘அபு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரத்தை மேற்கத்திய நாடுகளில் வாழும் சில இந்தியர்களுடன் தொடர்புப்படுத்தி இங்குள்ளவர்கள் கிண்டல் ...

Read More »

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 94.  முன்னாள் அதிபர் ஜூனியர் புஷ்ஷுன் தந்தை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 94வயது வரை உயிரோடு இருந்த முதல் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 41-வது  அதிபராகப் பதவி வகித்த ஜார்ஜ் எச்டபிள்யு. புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை  அந்த பதவியில் இருந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காலத்தில் இருமுறை துணை அதிபராகவும் ...

Read More »

பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை!

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான்  இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். ரிவிரவிற்கு  அவர் இதனை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இரு காவல் துறை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் என கருணா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையிது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச்செய்துள்ளதுடன்  ...

Read More »

முன்னாள் போராளிகளே சிறிலங்கா காவல் துறையினரை கொலை செய்தனராம்!- -ஐலன்ட்

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளே சிறிலங்கா காவல் துறையினர்  படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்தார் என ஐலன்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் பலமான கோட்டையாக முன்னர் விளங்கிய வவுணதீவு பகுதியில் இரு காவல் துறையினர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளை நேரில் கண்காணிப்பதற்காகாவல் துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுள்ளார். பூஜித்ஜெயசுந்தரவுடன் சிஐடியின் முக்கிய அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இரு காவல் துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பாடசாலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர் மாணவர்கள் நேற்று பாடசாலையைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என மாணவர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படக்கூடாது என கடந்த திங்கட்கிழமை (26) அவுஸ்திரேலிய பிரதமரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Read More »

அமர்வை புறக்கணித்த அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த பிரேரணை மீதான ஒழுங்குப் பத்திரங்களை முன்வைத்து, பாட்டலி, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகின்றனர். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான நிதியை ரத்து செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சபையில் முன்வைத்தார். ...

Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை:மக்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழையால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகள் தற்போது வழங்கப்படுகின்றது என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். துணுக்காய் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று உதவிகள் வழங்கப்பட்டன. அவர் மேலும் தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்படும் போது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய செயற்பாடுகளில் மக்கள் ஈடுபடவேண்டும். தற்காலிக வீடுகளில் இருக்கின்ற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கான நிதிவழங்கல் செயற்பாடும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நிவாரண சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது. அரச அரச ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.   இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவிவரும் ...

Read More »