Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியாவில் உற்ற நண்பரை கொலை செய்த நபர்!

அவுஸ்திரேலியாவில் தனது உற்றநண்பனை படுகொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் இளைஞனை காவல் துறையினர்  கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவின், அடிலெய்ட்டிலிருந்து பெர்த்துக்கு வாகனத்தில் அழைத்துச்செல்லும் வழியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. விக்டோரிய மாநிலத்தை சேர்ந்த இந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரைக்கும் தடுப்புக்காவலில் வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தக்கொலைச்சம்பவம் கடந்த டிசெம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட்டை சேர்ந்த ஆப்கான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரரும் அங்குள்ள ஆப்கான் ...

Read More »

20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

20 புதிய அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணத்தை செய்யவுள்ளதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணின் தலைவர்களான மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலிக் சமரவிக்குமார அமைச்சரவை  ஏற்றுக்கொள்ள முடியாது என முடிவு செய்துள்ளனர்.

Read More »

முல்லைத்தீவில் ஒருதொகுதி ஆயுதங்கள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில்  காட்டுப்பகுதியிலிந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு காவல் துறை  விசேட அதிரடிப்படையினரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது   முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு காவல் துறை  விசேட அதிரடிப்படையினரால் நேற்று குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5  81  மில்லிமீட்டர் எறிகணை -01  81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் ...

Read More »

மிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவை ...

Read More »

ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ...

Read More »

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது!

ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும்  இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. எனவே  எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை  ...

Read More »

கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பணிகளிற்காக மட்டுமே 2000 காவல் துறையினர்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையில் காவல் துறை  கொழும்பு நகரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நகர் உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களில் ஏற்படும் வாகன நெரிசல்களை தடுக்க காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் விஷேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் ...

Read More »

முன்னாள் போராளியின் விடுதலைவேண்டி மனைவி குழந்தைகள் உணவு தவிர்ப்பு போராட்டம்!

வவுணதீவில் சிறிலங்கா காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். அஜந்தனின் மனைவி தனது இரண்டு மாதமேயான குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுடன் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு, கன்னன்குடாவில் வசிக்கும் கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் (அஜந்தன்) என்ற முன்னாள் போராளி வவுணதீவுகாவல்துறையினரால்  கடந்த 30ம் திகதி அன்று கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று கிளிநொச்சி ...

Read More »

டுபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது இந்திய சிறுவன்!

இந்தியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக அதனை நடத்தி வருகிறார். டுபாய் நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் 13 வயது சிறுவன் தான். ஆனால் இவரது வயதிற்கு முற்றிலும் பொருந்தாத வகையில் இப்போதே தனக்கென மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கி இருக்கிறான். டிரைநெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு இருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் தற்சமயம் மூன்றுபேர் பணியாற்றி வருகின்றனர். மூன்று பணியாளர்களும் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலும் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர். தற்சமயம் ...

Read More »

முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது!

முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது  இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக அரசாங்கம்  நிறுத்தவேண்டுமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.   ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி என்பவரை விசாரணைக்காக 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் ...

Read More »