வவுணதீவில் சிறிலங்கா காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அஜந்தனின் மனைவி தனது இரண்டு மாதமேயான குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுடன் உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு, கன்னன்குடாவில் வசிக்கும் கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் (அஜந்தன்) என்ற முன்னாள் போராளி வவுணதீவுகாவல்துறையினரால் கடந்த 30ம் திகதி அன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
அதேபோன்று கிளிநொச்சி வட்டக்கச்சியை சேர்ந்த முன்னாள் போராளியொருவரும் விசாரணைக்கென அழைக்கப்பட்டு கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
