Tag Archives: ஆசிரியர்தெரிவு

முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்த அவுஸ்திரேலிய அரசாங்கம்!

IS பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும், முக்கிய நபர் ஒருவரின் குடியுரிமையை அவுஸ்திரேலிய அரசாங்கம், ரத்து செய்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிறந்த நீல் பிரகாஷ் (Neil Prakash) என்பவர், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில், துருக்கியில் விசாரிக்கப்பட்டு வந்ததாக, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், துருக்கியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அவர் அங்கு பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளின் பேரில் தேடப்பட்டு வருவதாக, அமைச்சு குறிப்பிட்டது. மெல்பர்னில், ...

Read More »

மெல்போர்ன் டெஸ்ட்: 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

மெல்போர்ன் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா 137 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. ஆஸ்திரேலிய அணி முதல் ...

Read More »

அமெரிக்காவிடம் ரகசிய உதவியை நாடிய முஷரப்!

பாகிஸ்தானில் மீண்டும் அதிபர் ஆவதற்கு அமெரிக்காவின் ரகசிய உதவியை முஷரப் நாடியது காணொளி மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானில் 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 75). இவர் 2007-ம் ஆண்டு, அங்கு நெருக்கடி நிலையை கொண்டுவந்தது பெரும் எதிர்ப்புக்கு வழி நடத்தியது. 2008-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது அந்தக்கட்சியும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், முஷரப்பை பதவியில் இருந்து ...

Read More »

வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்!

கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வாள் வெட்டினை மேற்கொள்ள முயன்றுள்ளனர். இந் நிலையில் அவர் அபாய குரல் எழுப்பியவாறு வீட்டினுள் ஓடியுள்ளார். அதனை அடுத்து வாள் வெட்டு குழுவினர் கதிரையை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். வீட்டு உரிமையாளரின் அபாய குரலை அடுத்து அயலவர்களும் அப்பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களும் அவ்விடத்திற்கு விரைந்த ...

Read More »

பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு அவசியமில்லை!-சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய

பன்­னாட்டு நீதித்­து­றை­யின் தலை­யீடு இனி­யும் இலங்­கைக்­குத் தேவை­யில்லை. இலங்கை நீதித்­து­றை­யின் சுயா­தீ­னம் அதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய தெரி­வித்­துள்­ளார். சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வுக்­கும், சர்வ மதத் தலை­வர்­க­ளுக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் சந்­திப்பு நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­வே­ன­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கும் இடையே கருத்து மோதல்­கள் வலுப்­பெற்­றன. அதைத் தணித்து இரு­வ­ருக்­கும் இடை­யில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நான் தொடர்ந்து முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தேன். ...

Read More »

100 தடவைகளுக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன்!

ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் சுமந்திரன் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்போதே ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என வழமையான தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது குறிப்பிட்ட அவர், மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை ...

Read More »

எகிப்தில் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

எகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். எகிப்து தலைநகர் கெய்ரோ அருகில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்ப்பதற்காகவும், அங்கு நடைபெறும் ஒலி ஒளி நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காகவும் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று ஒரு பேருந்தில் சென்றனர். அந்த பேருந்து, பிரமிடுகளுக்கு அருகில் உள்ள மரியோத்தியா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பேருந்து சின்னாபின்னமாகச் சிதறியது. பேருந்தில் பயணம் செய்த 3 சுற்றுலாப் பயணிகள், மற்றும் ...

Read More »

கிழக்கில் மேலும் காணிகள் விடுவிக்கப்படும்!-வியாழேந்திரன்

கிழக்கில் இராணுவம், பொலிஸார், கடற்படையினர் வசமுள்ள இன்னும் பல காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட வேண்டுகொளுக்கு இணங்க ஜனாதிபதியின் பேரில் காணிகள் சில விடுவிக்கப்பட்டன இது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக யுத்ததால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்க ...

Read More »

அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது!

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கையரான மொஹமட் நிஷாம்தீனை பயங்கரவாதியென தெரிவித்து அவரைக் கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீண்டும் அவுஸ்திரேலிய காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பெண் சாட்சியாளரொருவருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டு பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அர்சலானின் சூழ்ச்சியால் இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் சுமார் ஒரு மாதக்காலமாக அவுஸ்திரேலிய உயர் பாதுகாப்பு ...

Read More »

விசேட படைப்பிரிவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக  அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங்களை அவர் ...

Read More »